பிறை பார்த்தாச்சு! இன்று முதல் ரமலான் நோன்பு துவங்கியது!

 
இன்று முதல் தமிழகம், புதுவையில் ரமலான் நோன்பு !

நேற்று மாலை பிறை தெரிந்ததையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
ஊரடங்கால் வீடுகளில் எளிமையாக ரமலான் தொழுகை | In Salem, Muslims prayed  Ramadan in their homes and on terraces
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். அந்தவகையில், நாளை 3-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நோன்பு கடை பிடிப்பார்கள். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்.

இன்று மாலை பிறை தென்பட்டதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி  ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.

நோன்பு என்பது சூரியன் உதிப்பதில் இருந்து சூரியன் மறையும் வரை அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பதாகும்.

புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பின் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
தெரிந்தது பிறை.. நாளை முதல் தொடங்குகிறது புனித ரமலான் நோன்பு.. தமிழக அரசின்  தலைமை காஜி அறிவிப்பு | Tamil Nadu govt head Ghazi announce Ramadan fasting  will begin tomorrow ...

இசுலாமிய சகோதரர்கள் நோன்பு கடைப்பிடிக்கும் போது, கூடுமானவரை அவர்களை அதிகளவில் தொந்தரவு செய்யாமல் இருங்கள். தேவையில்லாமல் பகல் நேரத்தில் அவர்களுக்கு தொலைப்பேசியில் அழைத்து தொல்லைக் கொடுக்காமல் இருங்கள். உங்களிடம் இசுலாமிய சகோதரர்கள் பணிபுரிந்தால், அவர்களை பகல் நேரத்தில் அதிகளவில் வேலை வாங்காதீர்கள். எம்மதம் ஆனாலும், இறை ஒன்று தான். பிறரது இறை நம்பிக்கைக்கு நாமும் உதவியாக இருப்போம். இந்த வெயில் காலத்தில், நோன்பு இருப்பது அசெளகரியம் தான் எனினும், அவர்கள் சிறப்பாக நோன்பு கடைப்பிடிக்க நம்மால் ஆன உதவியைச் செய்வோம்.

ஷ்...ப்பா...! என்னா வெய்யிலு? உடம்பை சில்லுன்னு வெச்சுக்க ஈஸியான ரெசிப்பி!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை