மல்லை சத்யா மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்... வைகோ அறிவிப்பு!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. இவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட மல்லை சத்யா, அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
வைகோ மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடன் மல்லை சத்யாவுக்கு இடையே நீண்ட நாட்களாக கருத்து மோதல் நிலவி வந்தது முன்னதாக ஆகஸ்ட் 17ம் தேதி மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கி வைகோ உத்தரவு பிறப்பித்திருந்தார், மேலும் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கும்படி கேட்டிருந்தார்.“மல்லை சத்யாவின் செயல்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவை. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டார். எனவே, மதிமுகவின் சட்ட திட்டங்களின்படி, அவரை அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.
கட்சி உடமைகள் மற்றும் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கும்படி மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, மதிமுகவில் உட்கட்சி பிளவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், இந்த முடிவை எதிர்த்து, செப்டம்பர் 15, 2025 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முப்பெரும் விழாவாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்நிகழ்வில், வைகோவுக்கு ‘திராவிட ரத்னா’ விருது வழங்கப்படும் என மல்லை சத்யா அறிவித்திருந்தாலும், அவரது நீக்கத்தால் இந்தத் திட்டம் பாதிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
