மீண்டும் மோடி... வேண்டும் மோடி... பிரதமராக 48 சதவிகித மக்கள் ஆதரவு! கலக்கத்தில் காங்கிரஸ்!

 
மோடி

கர்நாடக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பாஜக ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் அவர் வெற்றி பெற மாட்டார் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி குறித்து, அடுத்த லோக்சபா தேர்தல் குறித்து, பல்வேறு தரப்பு மக்களிடம் ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலையிலான அரசு, கடினமான முடிவுகளை தைரியமாக எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 25.08 சதவிகிதம் பேரோ மோடி ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளர். 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, 68.85 சதவிகிதம் பேர், மோடி ஆட்சியின் மீது திருப்தியும், 28, 25 சதவிகிதம் பேர் அதிருப்தியும் தெரிவித்திருந்தனர். கடந்த 9 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருவதாக 53.8 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்  37.3 சதவிகிதம் பேர் அதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்தனர்.

ராகுல்

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் கவுரவத்தை கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளதாக, ஒவ்வொரு ஐந்து பேரில், 3 பேர் தெரிவித்துள்ளனர் அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா நேர்தலில், பிரதமராக யார் வர வேண்டும் என கேட்டதற்கு, 48 சதவிகிததிற்கும் அதிகமானோர், மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். என, தெரிவித்துள்ளனர்.

18 சதவிகிதம் பேர் ராகுல் வரவேண்டும் என்றும், 6 சதவிகிதம் பேர் உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் 5 சதவிகிதம் பேர் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும், 2 சதவிகிதம் பேர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பிரதமராக விருப் பம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் நாடாளுமன்றம்

இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதெல்லாம் சரி வரும் ஆண்டில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலுங்கனா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும் மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியும் தெலுங்கானாவில் CSRன் பாரத் ராஷ்டிரியா சமிதியும் ஆட்சியில் உள்ளது. கர்நாடக தேர்தலின் பொழுதே தண்ணியை குடிக்க வைத்த பாஜகவை சும்மா விட்டுவிடுவார்களா என்பதோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு மிக மிக முன்னோட்டமாக பார்க்கப்படும். என்ன செய்யப்போகிறார் மோடி என்பது ஒரு புறம் இருக்க மக்கள் மனதில் யாரு என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web