தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார் பர்துஹரி மஹ்தாப்... நிகழ்வை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!
18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவை சேர்ந்த பர்துஹரி மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 3வது முறையாக பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பொறுப்பேற்றுக்கொண்டது.
#WATCH | BJP MP Bhartruhari Mahtab takes oath as Pro-tem Speaker of the 18th Lok Sabha
— SansadTV (@sansad_tv) June 24, 2024
President Droupadi Murmu administers the oath
#Parliament #LokSabha #RajyaSabha #18thloksabha @LokSabhaSectt @BhartruhariM @rashtrapatibhvn pic.twitter.com/aoyMs1ugPl
இதையடுத்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றும் நாளையும் மக்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பர்துஹரி மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 7வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பர்த்ஹரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே தற்காலிக சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்ச்சியை இந்தியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. 8 முறை எம்பியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக, 7வது முறையாக எம்பி-யாகி இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்ததை கண்டித்து, இந்தியா கூட்டணி எம்பி-க்கள் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
