அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்... மருத்துவமனையில் அனுமதி!

 
தங்கமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் 5 மாவட்டங்களுக்கு மழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி வருவதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகின்றன.

டெங்கு

தமிழக முதல்வர் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வெடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார் .

டெங்கு ஒழிப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. டெங்கு பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் யாருக்கெனும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு உடல் சோர்வாக காணப்பட்ட நிலையில், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web