முன்னாள் சபாநாயகர், எம்.பி., கண்ணன் நிமோனியாவால் காலமானார்! தலைவர்கள் இரங்கல்!

 
கண்ணன் எம்.பி

புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரான கண்ணன், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு  நவம்பர் 6ம் தேதி 9:51 மணியளவில் காலமானார்.  சிகிச்சைப் பலனளிக்காமல் கண்ணன் உயிரிழந்ததை, அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தி, இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

லெட்டர்

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணனுக்குநுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி, அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகியது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அதன் பின்னர், தனது உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமடையவே  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் கண்ணன் செயல்பட்டவர். அவரது  மறைவுக்கு பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web