’பெரும் கலக்கம் அடைந்தேன்’.. தாக்குதல் குறித்து டென்மார்க் பிரதமர் உருக்கம்!

 
 மெட் ஃபிரடெரிக்சன்

டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் கோபன்ஹேகனுக்கு சென்றிருந்த போது மர்ம நபரா; தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் பிரதமரை தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 39 வயதுடைய நபர் ஜூன் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் தாக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பிரதமருக்கு கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மேட் பிரடெரிக்சன், "அன்று நடந்த சம்பவத்தால் நான் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தேன்.

இருப்பினும், தற்போது நலமாக உள்ளேன். எனக்காக குரல் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி" என்றார். இந்த நேரத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு டென்மார்க்கின் இளைய பிரதமராக மெட் ஃபிரடெரிக்சன் பதவியேற்றார். இப்போது அவருக்கு வயது 41 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web