தியாகி சங்கரய்யா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... திடீர் உடல்நலக்குறைவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

 
இன்று அகவை 100 காணும் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா!

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தியாகி என்.சங்கரய்யா, நேற்று  திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சளி தொந்தரவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

அவர் உடல் நலம் தேறி மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சங்கரய்யாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர்.

சென்னை அப்போலோ மருத்துவமனை

தற்போது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூலை 15ம் தேதி சங்கரய்யா தனது 101வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web