முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

 
ஸ்டாலின்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி, திமுக தொண்டர்களை பதற செய்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து ஓய்வின்றி பல இடங்களுக்கு சென்று கள ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். அதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும், அடுத்தடுத்து பல்வேறு அரசு விழாக்களுக்கும் சென்று மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பது, மக்களை சந்திப்பது, நீண்ட நேரம் உரையாற்றுவது என ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வருகிறார். 

MKS

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், அவருக்கு வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான நிலையில்,  சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

MAS

இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பருவகாலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலால் முதல்வர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் ஓய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web