அச்சச்சோ...துரை தயாநிதிக்கு என்னாச்சு?! வதந்திகளை நம்பாதீங்க... மருத்துவமனை தகவல்!

 
துரை தயாநிதி

இன்று காலை முதலே பிரபல தயாரிப்பாளரும், மு.க.அழகிரியின் அன்பு மகனுமான துரை தயாநிதி உடல்நிலைக் குறித்த செய்தி தான் வாட்ஸ்-அப்களிலும், சமூக வலைத்தளங்களில் வதந்தி தீயாய் பரவி வருகிறது. பல இணையதள ஊடகங்களும் வாட்ஸ்-அப்களில் வலம் வரும் செய்தியை அப்படியே சரி பார்க்காமல் அவசர கோலத்தில் அதை செய்தியாக்கிக் கொண்டிருந்தன. ப்ளீஸ்.. துரை தயாநிதி உடல்நிலைக் குறித்த வதந்தியை  யாரும் நம்பாதீங்க. அவர் நலமுடன் இருப்பதாக வேலூரி சி.எம்.சி மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் 6ம் தேதி துரை தயாநிதி சென்னையில் திடீரென மயங்கி சரிந்தார். இது குறித்த தகவலறிந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு துரை தயாநிதிக்கு மூளையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் முதல்வரும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதி உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.  

துரை தயாநிதி

இதன் பிறகு 3 மாத காலம் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி, கடந்த மார்ச் 14ம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலூரில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து, அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.  

துரை தயாநிதி

அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. இதற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், துரை தயாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரை தயாநிதியின் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web