‘பத்ம விபூஷண்’ ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிக்கை நிறுவனர், தொழிலதிபர் ‘பத்ம விபூஷண்’ ராமோஜிராஜ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The passing away of Shri Ramoji Rao Garu is extremely saddening. He was a visionary who revolutionized Indian media. His rich contributions have left an indelible mark on journalism and the world of films. Through his noteworthy efforts, he set new standards for innovation and… pic.twitter.com/siC7aSHUxK
— Narendra Modi (@narendramodi) June 8, 2024
ஈநாடு மற்றும் ராமோஜி குழும நிறுவனர் ராமோஜிராவ் 1936 நவம்பர் 16-ம் தேதி ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புடபருபுடி கிராமத்தில் பிறந்தார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஜூன் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார்.
அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்தால் பயனடைவதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!