டெல்லிக்கு விரைந்த ரஜினிகாந்த்... மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு?!

 
டெல்லிக்கு விரைந்த ரஜினிகாந்த்... மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு?!

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 3வது முறையாக பிரதமராக மோடி நாளை மறுநாள் ஜூன் 8ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இமயமலை பயணத்தை முடித்து விட்டு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு விரைந்துள்ளதால், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளதன் காரணம் தெரியாத நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணி கட்சியினருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு சந்திரபாபு நாயுடுவுக்கும், பிரதமர் மோடிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து  செய்தியாளர்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு, அவர் எந்த பதிலும் சொல்லாமல் கிளம்பி சென்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web