சென்னையில் அதிர்ச்சி... தமிழக எம்பி காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
செல்வராஜ்

சென்னையில் இன்று அதிகாலை 1 மணியளவில் தமிழக எம்.பி., செல்வராஜ் சிகிச்சைப் பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாகை மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ், சென்னையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மே 2ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 

செல்வராஜ்

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு மணி அளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.  அவருக்கு வயது 67/ இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 67 வயதான செல்வராஜ், கடந்த 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web