நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு!

 
144

 இந்தியா முழுவதும்  102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல்  19ம் தேதி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதி  கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம் உட்பட   13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில்   நாளை நடைபெற உள்ளது.   தேர்தலையொட்டி 89 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

144

அதன்படி காவலர்கள், துணை ராணுவத்தினர் என  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கர்நாடகாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 14 தொகுதிகளில் திடீரென 144 தடை உத்தரவு  அறிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள  28 தொகுதிகளில்  பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உட்பட  14 தொகுதிகளில் நாளை மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளா உட்பட  13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web