4ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், முக்கிய வேட்பாளர்கள், தொகுதிகள் ... முழு தகவல்கள்!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
 

மக்களவைத் தேர்தல்  7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கபட்ட நிலையில் இதுவரை  ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 என 3 கட்ட  வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 4வது  கட்ட வாக்குப்பதிவு மே 13ல் நடக்கிறது.  பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட்  மாநிலங்களில் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  4வது கட்டத்தில்  10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில்  ஆந்திரப் பிரதேசம் (25 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி), ஜார்கண்ட் (4 தொகுதிகள்), மத்தியப் பிரதேசம் (8 தொகுதிகள்), மகாராஷ்டிரா (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலங்கானா (17 தொகுதிகள்)  உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), மற்றும் மேற்கு வங்கம் (8 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில்  96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தல் ஆணையம்
4ம் கட்ட மக்களவை தேர்தலில்  மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 4,264 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 25 . இதில் பரிசீலணைக்குப் பிறகு 1,970 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 

4ம் கட்ட வாக்குப்பதிவில்  முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி: கன்னோஜ் 
மேற்குவங்கத்தில் மஹுவா மொய்த்ரா,   
கிரிராஜ் சிங்,  பெகுசராய், பீகார்
ஒய்.எஸ்.சர்மிளா , கடப்பா, ஆந்திரப் பிரதேசம்
அர்ஜுன் முண்டா குந்தி, ஜார்கண்ட்
சத்ருகன் சின்ஹா அசன்சோல், மேற்கு வங்காளம்
மாதவி லதா  ஹைதராபாத், தெலுங்கானா

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web