தமிழகத்தில் 72 சதவீதம் ஓட்டுப்பதிவு... காத்திருந்து வாக்களித்த இளம் வாக்காளர்கள்!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் மதியம் வரை மந்த நிலை காணப்பட்டது. மதியம் பிற்பகல் 3 மணிக்கு மேல், இளம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் நின்று வாக்களித்தனர். நேற்றைய தேர்தலில் தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீதமும், சிதம்பரத்தில் 74.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்குரிமை பெற்ற இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததைக் காண முடிந்தது.  மாலை 3 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகளவில் நடைப்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைப்பெற்றது.

தேர்தல்
முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 6 கட்டத் தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தமிழக தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள மக்கள் 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். 

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web