செம மாஸ்... ஒற்றை ஆளாய் பஞ்சாப் தேர்தலையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்! குவியும் வாழ்த்துக்கள்!

 
ஜீவன் சிங் மல்லா
 

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடித் தமிழர் ஒருவர்  பஞ்சாப் தேர்தலையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். தமிழகத்தில்  பகுஜன் திராவிடக் கட்சியின் தல்வர்  ஜீவன் சிங் மல்லா. இவர்   மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில்  ஹோஷியார்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழர் என்பதால் அந்த தொகுதி அதிக கவனம் ஈர்த்துள்ளது. இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.   இவரின் இயற்பெயர் ஜீவன் குமார் மல்லா.  இவர் கடந்த ஆண்டு ஜனவரியில்  சீக்கிய மதத்தைத் தழுவி பெயர் மாற்றம் செய்து கொண்டார். அத்துடன்  பகுஜன் திராவிடக் கட்சி என்ற கட்சியையும் தொடங்கி விட்டார்.  தமிழகத்தில்  அவரது கட்சியைச் சேர்ந்த ஏழு சீக்கியர்கள் தமிழகத்தில்  போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் BDP வேட்பாளர்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காடோடிபண்ணை கிராமத்தை பூர்வீகமாக  கொண்ட   ஜீவன் சிங் மல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 51. இவர்  கடந்த சில மாதங்களுக்கு முன் பகுஜன் திராவிடக் கட்சியை தொடங்கினார்.

ஜீவன் சிங் மல்லா

இந்து மதத்திலிருந்து சீக்கிய மதத்திற்கு மாறினார். இது குறித்து  சீக்கிய மதம் தான் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு  சாதி அமைப்பில் இருந்து விடுதலை அளிக்கிறது. சீக்கிய மதம் மட்டுமே சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கிர்பான் அமைதியின் சின்னமாக இருப்பதால், அமைதியின் செய்தியை ஊக்குவிக்கிறது என விளக்கம் அளித்தார்.  சீக்கிய மதத்தைத் தழுவுவது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான். எனது மனைவியும், குழந்தைகளும் மதம் மாறவில்லை.  2023 ஜனவரியில்  கேப்டிவேட்டிங் தி சிம்பிள்-ஹார்ட்டட்: எ ஸ்ட்ராக்கிள் ஃபார் ஹியூமன் டிக்னிட்டி இன் இந்திய துணைக் கண்டம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படித்தேன் அதன் பிறகுதான் நான் மதம் மாறி விட்டேன்.  

வேட்புமனுத் தாக்கல்

அந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். இதே புத்தகத்தை  எனது மனைவி  ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ளார்.  குரு கோவிந்த் சிங் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கன்ஷிராம்,  ஓஷோவின் சொற்பொழிவுகளில் இருந்து சீக்கிய குருக்கள் பற்றி தெரிந்து கொண்டேன். இவை எல்லாமே  நான் மதம் மாற காரணமாக இருந்தது.எனது தாத்தா கலுங்கடியோயன் நிலமற்ற விவசாயக் கூலி. எனது தந்தை இளைய பெருமாள் அதே பகுதியில் உள்ள 100 கிராமங்களில் முதல் பட்டதாரி. தமிழக அரசில் கிரேட் 1 அதிகாரியாக பணிபுரிந்தவர். எங்களுக்கு சுயமரியாதை, சம மரியாதை கொடுக்கும் மதமாக சீக்கிய மதம் இருக்கும் என்பதால்தான் இந்த மதத்திற்கு மாறினேன். கடந்த 10 வருடமாக அடிக்கடி பஞ்சாப்பிற்கு சென்ற ஜீவன் சிங் மல்லா இந்த முறை பஞ்சாப் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தார்.  
ஜீவன் சிங் மல்லா சட்டப் பட்டதாரி மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2019ல் BDP கட்சியை தொடங்கினார். BDP எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இதுவாக உள்ளது.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உ.பி., மற்றும் டெல்லி உட்பட பல  மாநிலங்களில் 40 வேட்பாளர்களை அக்கட்சி இந்த முறை நிறுத்தியுள்ளது. அவரைத் தவிர மேலும் 2  வேட்பாளர்கள் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக ஜீவன் சிங் மல்லா கூறியுள்ளார்.   தமிழர் ஒருவர் தனியாக கட்சி தொடங்கி பஞ்சாப்பில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web