நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்!

 
மன்சூர்
 

வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், இன்று சத்யமூர்த்திபவனின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையிடம் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்துள்ளார்.இந்திய ஜனநாயக புலிகள் என்று கட்சி துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான், அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். பின்னர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், அதிமுக உள்ளிட்டக் கட்சிகளுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தலில் போட்டியிட யாரும் வாய்ப்பு தராததால், வேலூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். 

திடீர் என்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்
இப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான்,  “பூஸ்டர் ஊசி, அடுத்து ஹார்லிக்ஸ் ஊசி என விதவிதமாக கண்டுபிடித்தது போல முதலில் ஈவிஎம் மிஷின் அடுத்து கன்ட்ரோலிங் யூனிட் என என்னென்னவோடு கொண்டு வருகிறார்கள்.
இதற்கு பேப்பரிலேயே தேர்தல் வச்சுடலாம். பாரத பிரதமரை தூக்கி உள்ளே போடுங்க. தாய் கழகத்தில் இணைவதற்காக நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். 15 வருடங்கள் முன்பு காங்கிரஸில் இருந்தேன். கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கினேன். என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை ஜெயிச்சிருக்கிறேன். 

 

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!
சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடலை. 
நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரணக் குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web