ரூ16 லட்சம் கடன் தான்... என்கிட்ட ஒரு கார் கூட சொந்தமா இல்ல... மத்திய அமைச்சர் அமித்ஷா!

 
அமித்ஷா

 இந்தியா முழுவதும் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  தேர்தல் பிராமண பத்திரத்தில் தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை எனவும்,  தனக்கு ரூ.15.77 லட்சம் கடன் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார். குஜராத்தில்  மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும்   மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அங்கு மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா, காந்திநகர் தொகுதியில்  மீண்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அமித்ஷா

அவர் தாக்கல் செய்திருக்கும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில்  ​அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் கிடையாது, விவசாயத் தொழில் செய்து வருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.  அதே நேரத்தில் அவரது வருமான ஆதாரங்களாக  எம்பி பதவிக்கான சம்பளம், வீடு – நிலம்  வாடகை, பங்கு ஈவுத்தொகை வருமானம் இவைகளைக்  குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா

இதனுடன், தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும்  ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. ரூ. 15.77 லட்சம் கடன் உள்ளது. ரொக்கப் பணமாக ரூ.24,164 மட்டுமே உள்ளது. ரூ. 72 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web