பதவி விலகத் தயார்... வாக்களித்த பின் அண்ணாமலை ஆவேசம்!

 
அண்ணாமலை

 தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் , பொதுமக்கள் என பாரபட்சமின்றி அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில்  கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் , கோவை வேட்பாளருமான அண்ணாமலை இன்று தனது பெற்றோருடன் வந்து வாக்கு செலுத்தினார்.  

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டியது அவசியம்.  எனது ஜனநாயக கடமையை நான் நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்துள்ளேன்.  தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் , பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் . நீங்கள் எங்கிருந்தாலும் இன்று மாலைக்குள் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். உடனடியாக உங்களது வாக்கினை பதிவு செய்யுங்கள்.  

இந்தியாவில் அப்போதுதான்  நல்ல ஆட்சி உருவாகும்.  இந்தியா முழுவதும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு வருகிறது.  கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயார் . பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள், கொள்கை, லட்சியம். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்தத் தேர்தல் முழுமையாக நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறம் சார்ந்த வேள்வி எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!