மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை... பாஜக தொண்டர்கள் உற்சாகம்!

 
அண்ணாமலை

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வரலாற்றில் கேரளத்தில் முதல் முறையாக பாஜக கால் பதித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த உயரத்தை இதுவரை பாஜக பெற்றதில்லை என்பதால் வட இந்திய தலைவர்கள், தமிழக பாஜக வளர்ச்சியை பெரியளவில் நினைக்கிறார்களாம்.

இது எந்த தமிழக பாஜக தலைவரும் செய்யாத சாதனை என்பதால், அண்ணாமலையின் பேச்சுக்கு, அதிமுக எதிர்ப்பு அரசியலுக்கு அவர்கள் தடை மேலிட தலைவர்கள் தடை சொல்லவில்லை. சொந்த கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் போன்றவர்கள் அண்ணாமலை மீது வைக்கும் விமர்சனங்களையும் கண்டுக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் 11.24 சதவீதம் வாக்குகளை பெற்று தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. தோல்விக்கு மத்தியில் பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மீது பெரிய அதிருப்தியை தலைமை தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் பிற கட்சி தலைவர்களை விட, தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலையின் பக்குவத்தை மேலிடத் தலைவர்கள் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் ரிசல்ட் வேறு மாதிரி வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், அமித்ஷா அண்ணாமலையை அழைத்து, ‘வெற்றி தோல்வி பற்றி கண்டுக் கொள்ள வேண்டாம். தமிழகத்தின் கட்சி நன்றாக வளர்ந்திருக்கிறது. கட்சி தான் முக்கியம்... வாழ்த்துக்கள்’ என்று பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி அளிக்கப்படுகிறது. 

அண்ணாமலை
ஏற்கனவே எல். முருகனுக்கு மத்திய  அமைச்சரவையில் இடம் அளித்திருந்த நிலையில் 2026ல் தமிழக தேர்தலை குறிவைக்கவும் தொடங்கியுள்ளது. இதனால் பாஜக அதன் இலக்கில் இருந்து தற்போது அண்ணாமலையை திசை திருப்பவும் பாஜக தலைமை விரும்பாது எனவும் சிலர் கூறுகின்றனர்.  மத்திய அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் அமைக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால் அப்போது இதற்கான பதில்கள் கிடைத்து விடக்கூடும். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web