’மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பு'.. மாலத்தீவு அதிபர் பெருமிதம்!

 
 முகமது முய்சு - மோடி

இந்தியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளது.  தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாலத்தீவிற்கான இந்திய தூதர் முனு மாவகர் இந்த அழைப்பிதழை ஜனாதிபதி முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முகமது முய்சு ஏற்றுக்கொண்டதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முயிசு

இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் நேர்மறையான திசைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று ஜனாதிபதி முகமது முய்சு கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web