பாஜக எம்பி ராஜ்வீர் திலர் காலமானார்... முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்!

 
ராஜ்வீர் திலக்
 


ஹத்ராஸ் தொகுதி எம்.பி., ராஜ்வீர் திலர் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 2019ல் ஹத்ராஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜ்வீர் திலர். தற்போது நடைப்பெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்க மறுத்தது.
ஹத்ராஸைச் சேர்ந்த பாஜக எம்பி ராஜ்வீர் திலர் (65) நேற்று அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.


ராஜ்வீர் திலரின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். "ஹத்ராஸ் லோக்சபா தொகுதியின் எம்.பி., ஸ்ரீ ராஜ்வீர் சிங் திலேர் ஜியின் அகால மறைவு பாஜக குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள்" என்று ஆதித்யநாத் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 
அவர் தனது பதிவில், “இறைவன் ஸ்ரீராமரின் ஆன்மாவுக்கு அவரது காலடியில் இடம் கொடுக்கவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இந்த மகத்தான இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்க பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!