அச்சச்சோ.... வாக்காளர்களே உஷார்... வாக்குச் சாவடிக்குள் செல்போன்களுக்கு அனுமதியில்லை... பல இடங்களில் வாக்களிக்காமல் திரும்பிச் செல்லும் அவலம்!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
 

வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பல இடங்களில் வாக்காளர்கள், செல்போன்களை எங்கே வைத்து செல்வது என்று புலம்பியபடியே வாக்களிக்காமல் திரும்பி செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. இது குறித்து எந்தவித முன்னறிவிப்பையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லையே என்று பல இடங்களில் பொதுமக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். 

தேர்தல்

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருவதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்சி, சின்னம் ஆகிய அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்கு வரக்கூடாது. வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது, குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் திடீரென வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்ற கூடுதல் கட்டுப்பாட்டையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் செல்போன்களுடன் வாக்கு சாவடிக்குள் செல்ல வாக்காளர்கள் அனுமதிக்கப்படவில்லை, அப்படியானால் செல்போன்களை எங்கே வைத்து விட்டுச் செல்வது?  என்று சில வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்கள் பிரச்சனை எழுப்பினர்.
'வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே வாக்காளர்கள் செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web