இன்று மாலை சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்.. அனைவரும் கலந்து கொள்ள உத்தரவு!

 
துரைமுருகன்
திமுக தலைவரும், தமிழக முதல்வருமன மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுகவின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இருந்தும் திமுக எம்.பி.க்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அறிக்கை

 தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும். அந்த சமயத்தில் மக்களவைத் தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எப்படி நடந்துக் கொள்வது, கருத்து சொல்வது ஆகியவைக் குறித்தும் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web