டவுன்லோட் பண்ணிக்கோங்க... வாக்குச்சாவடி மையம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்!
தமிழகத்தில் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலின்படி இந்த எண்ணிக்கை. ஆனால் அதே நேரத்தில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, விடுபட்டுள்ளது என தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையென்றால் மீண்டும் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கலாம். இருந்தும், பலர் வாக்குப்பதிவு அன்றுதான், வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று தங்கள் பெயர் இருக்கிறதா? எனத் தேடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளோம். அன்றைய தினம் வாக்குப்பதிவு மையத்தில் விசாரித்து கொள்ளலாம் என அலட்சியமாக உள்ளனர்.
இந்நிலையில், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, வரிசை எண், பாகம் எண், நாம் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள, ஒட்டர் ஹெல்ப்லைன் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்-பை எண் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணை பதிவிட்டால் அனைத்து தகவல்களையும் பெற முடியும். வாக்குச்சாவடி மையம், இடம் குறித்த அனைத்து தகவல்களையும் எளிதாகப் பெறலாம். இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி, எளிதில் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

அத்துடன் ‘‘தற்போது வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. அதனை அடையாளமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்து மட்டுமே ஓட்டு போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்ட வேண்டும். அப்போது தான் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்’’ எனக் கூறியுள்ளார்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
