தேர்தல் ஸ்பெஷல்... இன்று வாக்களிக்க வசதியாக இவர்களுக்கு எல்லா பேருந்துகளில் இலவசம்!

 
பேருந்து
தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.

அரசு பேருந்து

அதன்படி மக்களவை பொதுத் தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி  இலவசமாக பயணம் செய்யலாம் என  தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் இலவச பேருந்து

பேருந்தில் பயணிக்கும் வாக்காளர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் சாதாரண கட்டணம் நகரப் பேருந்துகளில்  கட்டணம் இன்றி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அரசுப் பேருந்து மண்டல துணை மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web