பிரதமரானதும் முதல் பயணம்... ஜூன் 13ம் தேதி இத்தாலி செல்கிறார் நரேந்திர மோடி!

 
பிரதமர் மோடி

நாளை பிரதமராக பதவியேற்றதும் முதல் வெளிநாட்டு பயணமாக ஜூன் 13ம் தேத் இத்தாலி செல்கிறார் நரேந்திர மோடி. 

நாளை பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,  பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  

மோடி
இத்தாலி அதிபர் ஜியோர்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, தென்கொரிய அதிபர் யுன் சுக் இயோல், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது சையது அல் நஹ்யான், எகிப்து அதிபர் அப்தெல்ஃபத்தா அல் சிசி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு போன் மூலம் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளனர். மோடி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் வரும் ஜூன் 13 மற்றும் 14 ம் தேதிகளில் இத்தாலி, ரோம் நகருக்கு செல்கிறார்.  முன்னதாக, ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி  இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜி7 கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மோடியின் தொடர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் உலக தலைவர் இத்தாலி நாட்டு அதிபர் மெலோனி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி
ஜூன் 13-15, 2024 அன்று அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாசியாவில் (ஃபசானோ) G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் கலந்து கொள்ள உள்ளனர்.  அத்துடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பானின் ஃபுமியோ கிஷிசா மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி7 மாநாட்டை அடுத்து  ஜூன் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் அமைதி உச்சி மாநாட்டிற்கும் மோடிக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web