இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை... வேட்பாளர்கள் அதிர்ச்சி...2வது இடத்தைப் பிடித்த நோட்டா!

 
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறை... வேட்பாளர்கள் அதிர்ச்சி...2வது இடத்தைப் பிடித்த நோட்டா!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, நோட்டாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததிருந்தது. இந்தநிலையில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்தூர் தொகுதியில் 1,92,689 வாக்குகளுடன் நோட்டா 2-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலின் போது மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது, காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில், மாற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ்தயங்கியது. தொடர்ந்து நோட்டவுக்கு வாக்களித்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யுமாறு அக்கட்சி பிரச்சாரம் மேற்கொண்டது.

இந்தூரில் 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் சிட்டிங் எம்.பி., ஷங்கர் லால்வானிக்கும், நோட்டாவுக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. 1,92,689 வாக்குகளுடன் நோட்டா 2-வது இடம் பிடித்துள்ளது. வாக்குப் எண்ணிக்கை இன்னும் தொடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் சிட்டிங் எம்பி ஷங்கர் லால்வானி 1,08,8311 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபா ஓசா கூறுகையில், “இந்த முறை இந்தூரில் நோட்டா குறைந்தது இரண்டு லட்சம் வாக்குகளைப் பெறும். இந்த தேசிய சாதனை வரலாற்றில் இடம்பெறும். ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. இந்தூரின் 72 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் இல்லாதது இதுவே முதல் முறை.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web