செம ஆபர்... ஓட்டுப்போட்டவங்களுக்கு இலவச பீர், பட்டர் தோசை, வொண்டர்லாவில் சிறப்பு சலுகை... அதிரடி அறிவிப்பு!

 
பீர்

 தமிழகம் உட்பட 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 26ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாக்காளர்கள்  தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில்  பல்வேறு  வர்த்தக நிறுவனங்கள் புதிய வகை ஆபர்களை அதிரடியாக அறிவித்துள்ளது.

பட்டர் தோசை

அந்த வகையில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மை மற்றும் அடையாள அட்டையை காண்பித்தால் அவர்களுக்கு இலவசமாக சுடசுட Butter Dosai, Gee Rice, பழச்சாறு வழங்கப்படும் என அதிரடி offer-களை அள்ளி தெளித்துள்ளது.  இதே போல வொண்டர்லா நிறுவனம்  வாக்குப்பதிவு தினத்தன்று வாக்கு செலுத்தி விட்டு அதன் அடையாளத்தை காண்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பீர்

இளைஞர்களுக்காக  ஹடுபீசனஹள்ளியில் அமைந்துள்ள Deck of Brews  என்ற  தனியார் மதுபானகூடம் இன்று வாக்களித்துவிட்டு, 27ம் தேதி மதுபானக் கூடத்திற்கு வரும் முதல் 50 நபர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த செய்தி இளைஞர்களிடையே  வேகமாக பரவி வருகின்றது.
பெங்களூரு என்ருபதுருங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டலில் வாக்களித்து விட்டு  வரும் மக்களுக்கு, இலவசமாக கர்நாடகா ஸ்பெஷல் பென்னி காளி தோசை, நெய் லட்டு மற்றும் ஜூஸ் வழங்கப்படும் என  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web