இங்க செங்கல்... கர்நாடகாவில் சொம்பு... அம்புட்டு தான் மத்திய அரசு... கர்நாடகாவில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!

 
செம்பு செங்கல்
 

தமிழகத்தில் நேற்று மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் ஜூரம் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2019 மற்றும் 2024 தேர்தல்களில் மத்திய அரசை விமர்சிக்கும் போது ஒரு செங்கலை காட்டி மக்களிடையே  பாஜகவை மட்டம் தட்டி வருகிறது. மதுரையில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே நடப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.  தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுக செங்கல் வைத்து பிரச்சாரம் செய்தது போல, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை விமர்சிக்க செம்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

தேர்தல்

கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  அந்த வகையில் இன்று பெங்களூருவில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் சொம்பு கொண்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர்.   போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

தேர்தல்
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசு ரூ100  வரி கொடுத்தால் மத்திய அரசு ரூ13  தான் திருப்பி தருகிறது. (தமிழகத்திற்கு 29 பைசா போல கர்நாடகாவுக்கு 13 பைசா தான்) கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களாக  கடும்வறட்சி நிலவி வருகிறது. அதனை நிவர்த்தி செய்ய ரூ17400 கோடி கேட்டோம் அதற்கும் எங்களுக்கு மத்திய அரசு சொம்பு தான் தருகிறது எனவே சொம்பு கொண்டு போராட்டம் நடத்துகிறோம் என கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web