அட... உங்க வாக்குச்சாவடியில் எத்தனை பேர் இருக்காங்க... வீட்டிலிருந்தே பாக்கலாம்!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

 இந்தியா முழுவதும் 102 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. நாட்டின்  18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட இந்தியாவில்  21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.  

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் பொதுமக்கள் ஓட்டுக்காக தயார் நிலையில் காத்துக்கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் பொதுமக்கள், நமது வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்குமா? எப்போது செல்லலாம்? இப்போது சென்றால் உடனே வாக்களித்து விட்டு உடனே திரும்பி விடமுடியுமா ? என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி  உள்ளது.  

தேர்தல்

அதன்படி  உங்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க எத்தனை பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்பதனை நாம் வீட்டில் இருந்தப்படியே தெரிந்து கொள்ளலாம். இங்கே உள்ள கியூஆர் கோடு-ஐ ஸகேன் செய்தோ, https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ  உங்களது வாக்குச்சாவடிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அங்கு எத்தனை பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலை வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். வாக்குச்சாவடியில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை பலன் அளிக்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web