தாயின் மரியாதைக்காக... ஆயிரம் வேலைகளை இழக்கலாம்... மீண்டும் கன்னத்தில் பொளேர் விட்ட பெண் காவலர்!

 
கங்கனா

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபல நடிகை கங்கனா ரனாவத், டெல்லிக்கு திரும்புவதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் உடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்துள்ளார் குல்விந்தர் கவுர். 


விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் தரம் தாழ்ந்த கருத்துக்களால் ஆத்திரமடைந்ததாக நடந்த சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் கூறினார். விவசாயிகள் ரூ.100 வாங்கிக் கொண்டு போராடுவதாக நடிகை கங்கனா தெரிவித்திருந்தது எரிச்சலடைய செய்தது. என் தாயாரும் அங்கே போராடிக் கொண்டிருந்தார்... இப்படி ரூ.100 கொடுத்தால் கங்கனா போராடுவாரா? என்று ஆவேசமானார் குல்விந்தர் கவுர்.

கங்கனா ரனாவத்

இந்த சம்பவம் தொடர்பாக குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நிலையில், காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், நாடு முழுவதும் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பலரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இயக்குநரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தவறு கிடையாது.. என்று பாராட்டியுள்ளார். 

இந்நிலையில், தனது வேலையிழப்பு குறித்து பேசிய காவலர் குல்விந்தர் கவுர், தாயின் மரியாதைக்காக இது போன்ற ஆயிரம் வேலைகளை இழக்கலாம் என பேசி மீண்டும் எதிர்பாளர்களின் கன்னத்தில் ‘பெளேர்’ விட்டிருக்கிறார்.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் குல்விந்தர் கவுர், "இந்த வேலையை இழப்பது பற்றி எனக்கு பயம் இல்லை. எனது அம்மாவின் மரியாதைக்காக இது போன்ற ஆயிரக்கணக்கான வேலைகளை இழக்கவும் தயாராக இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web