கண்கலங்கிய மோடி... “அம்மா இல்லாமல் நான் சந்திக்கும் முதல் தேர்தல்” பிரத்யேக பேட்டி!

 
மோடி

 இந்தியாவில் இன்று 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் 3ம் முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும் இந்த முறையாவது ஆட்சி கட்டிலில் அமர காங்கிரசும் போட்டா போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த  பரபரப்புக்கு இடையில் பிரதமர் மோடி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில்  பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்  டைம்ஸ் நவ் தொலைக்காட்சி குழும ஆசிரியர் நவிகா குமாருடன் கலந்துரையாடினார்.  இந்த பேட்டியில் தேர்தல் சவால்கள்,  அடுத்தடுத்த விவாதங்கள் என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்த  தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார்.

 அந்த வகையில் காசியில் மீண்டும் போட்டியிடுவது  குறித்தும் காசிக்கும் தனக்குமான உறவு குறித்தும் இந்த பேட்டியில் பேசியுள்ளார். இந்த தேர்தலில் தன்னுடைய தாய்,  தாய் இல்லாதது குறித்தும் அவர் தனக்கு வழங்கிய ஆசிர்வாதங்கள், அறிவுரைகள் குறித்தும்  பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.  அந்த வகையில் டைம்ஸ் நவ் ஆசிரியர் இந்த கேள்விக்காக வருத்தப்படுகிறேன் 2002 தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்று தேர்தலில் களம் காண்பீர்கள்.  இந்த முறை உங்கள் தாயார் இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள்? என ஆசிரியர் நவிகா குமார் கேட்டார்.அதற்கு பதில் கூறிய பிரதமர் மோடி, " நான் குஜராத் முதல்வராக பதவியேற்றது  எனது தாயாருக்கு  மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

மோடி

அப்போது அவர் எனக்கு 2 அறிவுரைகளை சொன்னார்.ஏழைகளை பார்த்துக் கொள், எப்போதும் ஊழலில் ஈடுபடாதே எனக் கூறினார். அதனை இன்னமும் மனதில் பொக்கிஷமாய் வைத்துள்ளேன்.  இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன் என் தாய் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இப்போது என் தாய் இல்லை, ஆனால் நாட்டின் பல கோடி தாய்மார்களின் ஆசிர்வாதம் இருப்பதாக எனக்குள் ஒரு உணர்வு இருக்கிறது. என் கங்கை தாயும் என்னுடன் இருக்கிறார்." என நெகிழ்ச்சியுடன்  கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web