கேரளாவின் முதல் பாஜக எம்பி... இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார் நடிகர் சுரேஷ் கோபி?!

 
சுரேஷ் கோபி

கேரளாவில் பாஜகவுக்கு முதல் முறையாக திருச்சூரில் வெற்றியைத் தேடித்தந்த நடிகர் சுரேஷ் கோபி, இணையமையச்சர் பதவி ஏற்ற நிலையில் தனது சினிமா பணிகள் காரணமாக அமைச்சர் பதவி வேண்டாம் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), இணை அமைச்சர்கள் என 71 பேர் நேற்றே பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களில் கேரள மாநிலத்தில் பாஜகவுக்கு முதல் எம்பி-யாக வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரும் நேற்று இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
 


இச்சூழலில் அமைச்சர் சுரேஷ்கோபி, தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என கட்சித் தலைமையிடம் தெரிவித்ததாகவும், ஆனால் பிரதமர் மோடி கட்டளையிட்டுள்ளதால், மறுப்பு தெரிவிக்காமல், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும், தான் ஒப்புக்கொண்ட சினிமா பணிகள் நிலவையில் இருப்பதாகவும், அமைச்சர் பதவியில் இருந்தால் இரண்டுமே பாதிக்கும் என்பதால் விரைவில் கட்சித் தலைமையிடம் தனது நிலையை எடுத்துக் கூறி, பதவியிலிருந்து விலக உள்ளதாகவும் சுரேஷ் கோபி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் எம்பி-யாகவே பணியை தொடர விரும்புவதாகவும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே 5 முதல் 7 படங்களை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் தென் மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்தவே தான் விரும்புவுதாக தெரிவித்துள்ளாராம்.
கேரளாவில் அரசியல் வரலாற்றை மாற்றினார் நடிகர் சுரேஷ் கோபி... திருச்சூர், திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி!

இது தொடர்பாக அரசியல் பார்வையாளர் ஒருவர் கூறுகையில், கேரளாவில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த சுரேஷ் கோபி, கேபினட் பதவியை எதிர்பார்த்திருக்கலாம் என்றும், ஆனால் இணை அமைச்சர் பதவி வழங்கியதால் அவர் இவ்வாறு கருத்துகளை வெளியிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தரப்பிலோ, சுரேஷ் கோபியின் இந்த கருத்து அவர் அமைச்சர் பதவியேற்பதற்கு முன்பு தெரிவித்திருக்கலாம். ஒரு வேளை அதன் பிறகு கூறியதாக இருந்தால், அவர் கட்சித் தலைமைக்கு எப்போதும் கட்டுப்படுபவர் என்பதால் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின் அடிப்படையில் அவரது செயல்பாடு இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!