பிரதமர் மோடி 3.0 | மத்திய அமைச்சர்களின் முழு பட்டியல் விவரம்!
![மோடி பதவியேற்பு](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/117a1819d412b01eb3bf58d260d3e0da.jpg)
பெரும் சவால்களுக்கு மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளார் பிரதமர் மோடி. தனிப்பெரும்பான்மை தட்டிப்போனாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைத்திருக்கிறார். கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், 5 ஆண்டு காலம் முழுமையாக மோடியால் ஆட்சி செய்ய முடியாது என்று எதிர்க்கட்சிகள் ஏகடியம் பேசியதும், முடித்துக் காட்டுகிறேன் என மோடி சவால் விட்டுள்ளார்.
#Modi 3.0 begins 🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/wZ8nKwOlVp
— Major Madhan Kumar 🇮🇳 (@major_madhan) June 9, 2024
எதிர்க்கட்சிகளின் கணிப்பின்படியே பிரதான கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் நெருக்கடிகளை தந்ததாக தகவல்கள் வெளியாயின. தங்கள் கட்சியை காப்பாற்றிக்கொள்ள மக்களவை சபாநாயகர் பதவியுடன், கேபினெட் அமைச்சர்கள், மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரம், திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியாதாரம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்டியலில் சேரும்.
மோடி - அமித் ஷா கூட்டணி வெற்றிகரமாக கூட்டணி பேரங்களை முடித்து, நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் மோடி மற்றும் கேபினெட் அமைச்சர்களின் பதவிப் பிரமாணத்தை வெற்றிகரமாக முடித்தது. மோடியை அடுத்து ராஜ்நாத் சிங் , ஜெ.பி.நட்டா, நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சௌகான் என மூத்த தலைவர்கள் பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து பின்வருவோர் மோடி 3.0 அமைச்சரவையின் பட்டியலில் 30 கேபினெட் அமைச்சர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இடம் பெறுகின்றனர்.
அவர்களின் பட்டியல் பின்வருமாறு:
நிர்மலா சீதாராமன்
எஸ்,ஜெய்சங்கர்
மனோகர் லால் கட்டர்
ஹெச்.டி.குமாரசாமி
பியூஷ் கோயல்
தர்மேந்திர பிரதான்
ஜிதன் ராம் மஞ்சி
ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் சர்பானந்தா சோனோவால்
டாக்டர் வீரேந்திர குமார்
கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு
பிரல்ஹாத் ஜோஷி
ஜுவல் ஓரம்
கிரிராஜ் சிங்
அஸ்வினி வைஷ்ணவ்
ஜோதிராதித்ய சிந்தியா
பூபேந்தர் யாதவ்
கஜேந்திர சிங் ஷெகாவத்
அன்னபூர்ணா தேவி
கிரண் ரிஜிஜு
ஹர்தீப் சிங் பூரி
மன்சுக் மாண்டவியா
ஜி கிஷன் ரெட்டி
சிராக் பாஸ்வான்
சிஆர் பாட்டீல்
ராவ் இந்தர்ஜித் சிங்
ஜிதேந்திர சிங்
அர்ஜுன் ராம் மேக்வால்
பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ்
ஜெயந்த் சௌத்ரி
ஜிதின் பிரசாத் நாத்
ஸ்ரீபத் நாயக்
பங்கஜ் சௌத்ரி
கிரிஷன் பால் குர்ஜர்
ராம்தாஸ் அத்வாலே
ராம் நாத் தாக்கூர்
நித்யானந்த் ராய்
அனுப்ரியா படேல்
வி சோமன்னா
டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி
எஸ்பி சிங் பாகேல்
ஷோபா கரந்த்லாஜே
கீர்த்தி வர்தன் சிங்
பிஎல் வர்மா
சாந்தனு தாக்கூர்
சுரேஷ் கோபி
எல் முருகன்
அஜய் தம்தா
பந்தி சஞ்சய் குமார்
கம்லேஷ் பஸ்வான்
பாகிரத் சௌத்ரி
சதீஷ் சந்த்ர துபே
சஞ்சய் சேத்
ரவ்நீத் சிங் பிட்டு
துர்கா தாஸ்
ரக்ஷா காட்சே
சுகந்தா மஜும்தர்
சாவித்ரி தாகுர்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!