பாஜகவில் இருந்து பிரபல பாடகர் பவன் சிங் நீக்கம்... கூட்டணி வேட்பாளருக்கு எதிராக களமிறங்கியதால் அதிரடி!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட போஜ்புரி பாடகர் பவன் சிங். இவரை பாரதிய ஜனதா கட்சி இவரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
Bihar BJP expels Bhojpuri singer Pawan Singh for contesting Lok Sabha elections against NDA's official candidate, as an independent candidate.
— ANI (@ANI) May 22, 2024
Pawan Singh had earlier announced his decision to contest from Karakat Lok Sabha constituency as an Independent candidate. pic.twitter.com/kLYbCWXMXm
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சிங் போட்டியிட முடிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது. மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முடிவை சிங் ஏற்கனவே அறிவித்திருந்தார். முன்னதாக, தற்போது திரிணாமுல் காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் இருந்து பாஜக தனது வேட்பாளராக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் இருந்து லோக்சபா தேர்தல் போட்டியில் இருந்து பவன் சிங் தனது பெயரை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
