ராகுல்காந்தி ரேபரேலியில் வேட்புமனுத்தாக்கல்.... தொண்டர்கள் வரவேற்பு!

 
ராகுல்


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் தங்களது குடும்பத் தொகுதியாக ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.    மக்களவை தேர்தலில் 5வது கட்டமாக மே 20ம் தேதி ரேபரேலி, அமேதி   தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று  வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிரியங்கா காந்தி போட்டியிட தயங்குவதால், ராகுல் காந்தி போட்டியிட  ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. 2004ல்  சோனியா காந்தியை  ரேபரேலியில் போட்டியிடலாம் என்றும் சில தலைவர்கள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி அதிரடி கைது! பரபரக்கும் தொடர் சம்பவங்கள்!

  இது குறித்து பிரதமர் மோடி “காங்கிரஸின் இளவரசர் வடக்கில் இருந்து ஓடிப்போய் தெற்கில் தஞ்சம் புகுந்தார். வயநாடுக்குப் புறப்பட்டார். இம்முறை தனக்கென வேறு ஏதாவது தொகுதியை அறிவிக்கலாம் என சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.  வயநாட்டில் ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன், அவருக்கு மற்றொரு தொகுதி அறிவிக்கப்படும். வேறு இருக்கை தேடுகிறார். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...” எனக் கூறியிருந்தார்.
2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி ரானி வெற்றி பெற்றார். இம்முறையும் ஸ்மிருதி இரானி அதே தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  
பிரியங்கா காந்தி வதேரா இந்த அரசியலில்  போட்டியிடுவதில்லை என்ற முடிவு எடுத்துள்ளார். இதனால் கட்சி இன்னும் குழப்பத்தில் உள்ளதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.  நாடு முழுவதும் தேர்தல் முடிவைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்மறையான கருத்தை உருவாக்கி விடக்கூடும் என  காங்கிரஸ் தலைவர்கள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.  இன்னும் 353 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இதில்  காங்கிரஸ் 330 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ராகுல் மோடி


ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் வாரிசு அரசியல் என பாஜகவின்  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம் என  போட்டியிட பிரியங்கா காந்தி தயக்கம் காட்டியதாகவும் தொண்டர்கள் கூறுகின்றனர்.  இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து அமேதி மற்றும் ரேபரேலியில் இதுவரை  காங்கிரஸ் 3 முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்திராகாந்தி  1977ல் ரேபரேலியில் முதன்முறையாக தோற்றார். 1996 மற்றும் 1998 இல் மீண்டும் ரேபரேலியை இழந்தது.   அதன் பிறகு  காங்கிரசின் குடும்பத் தொகுதியாகிவிட்டது. 1977, 1998 மற்றும் 2019 தேர்தல்களில் அமேதியில் காங்கிரஸ் தோல்வியடைந்தது  குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!