தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்குப்பதிவு!
சென்னை நெற்குன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் .சத்யபிரத சாஹு தமது வாக்கினை செலுத்தினார்.
சத்யப் பிரதா சாகு வாக்குப்பதிவு! pic.twitter.com/SSC1H4CwsW
— Dina Maalai (@DinaMaalai) April 19, 2024
இந்தியாவின் 18 வது மக்களவைப் பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், ராமதாஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினி , அஜீத், ராதிகா என திரையுலக பிரபலங்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
