மோடி 3 வது முறையாக பிரதமர்... பாஜக சுதாகர் ரெட்டி சிறப்பு ஹோமம், சிவகாளி பூஜை!

 
சுதாகர் ரெட்டி

 நாளை இந்தியா முழுவதும் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தான் 3 வது முறையும் பிரதமராவார் என்ற கருத்துக்கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மோடி 3வது முறையாக பிரதமராக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் ரகசிய ஹோமம் மற்றும் பூஜை செய்துள்ளார்  

சுதாகர் ரெட்டி

கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள கண்டியூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தமிழக பாஜவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ரகசியமாக ஹோமம் வளர்த்து, சிறப்பு சிவ காளி பூஜை மற்றும் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினார். மோடி மீண்டும் பிரதமராக சுதாகர் ரெட்டி ஹோமம் மற்றும் பூஜை நடத்தியது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web