பதற்றம்... வாக்குச்சாவடிக்கு சென்ற பாஜக வேட்பாளர் மீது கல்வீச்சு!

 
ராம்கிரிபால் யாதவ்

பீகார் மாநிலத்தில் கடைசி கட்டமாக 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் பாடலிபுத்ரா பாஜக சிட்டிங் எம்பியும், வேட்பாளருமான ராம்கிரிபால் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் மசவுரி பகுதிக்கு சென்றிருந்தார்.  அவரது வாகனத்திற்கு முன்னும் பின்னும் கான்வாய் வாகனங்கள் சென்றுள்ளன. அப்போது கான்வாய் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.அப்போது வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ராம்கிரிபால் யாதவ்

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாஜக வேட்பாளர் ராம்கிரிபால் யாதவ் , 'பெண் எம்எல்ஏ ஒருவர் சட்ட விரோதமாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததாக தகவல் கிடைத்தது.  

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

பின்ஜாடி கிராமத்தில் வசித்து வரும் 20 முதல் 25 பேர் எனது காரையும், கான்வாய் வாகனங்களையும் சுற்றி வளைத்து தாக்கினர். செங்கல், கற்கள் மட்டுமின்றி துப்பாக்கியாலும் சுடப்பட்டனர். அந்த கிராமத்தில் வசித்து வரும்  எங்களது கட்சியின் ஆதரவாளர் ஒருவர் என்னைக் காப்பாற்ற முயற்சித்தார்.  அப்போது அவர் துப்பாக்கி முனையில் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது' என்றார். மேற்கண்ட துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web