4ம் கட்டத் தேர்தல்... 10 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது!

 
தேர்தல்

 இந்தியாவின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4 வது கட்ட தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  4ம் கட்ட வாக்கு பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த வெளி நபர்கள் இன்று மாலை 6 மணியுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
 4ம் கட்ட வாக்குப்பதிவை பொறுத்தவரை  ஆந்திரா, தெலுங்கானா, உட்பட  10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு  மே 13ம் தேதி நாளை மறுநாள் திங்கட்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம்

ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் ஒரு புறம் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டியும்,  பாஜக உடன் கூட்டணி வைத்து சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web