இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது... 19ம் தேதி வாக்குப்பதிவு!

 
மோடி பிரச்சாரம்
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின்னர் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து பதில் அளித்த தேர்தல் ஆணையர், அவர் இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது. மைக்கில் பேசவில்லை, வாகனத்தை நிறுத்திவிட்டேன், டீ குடித்து கொண்டிருந்தேன் என எந்த காரணங்களும் ஏற்புடையது அல்ல என்றார். இது விவகாரம் குறித்து காவல்துறை தகுந்த  நடவடிக்கை எடுக்கும். இன்று ஏப்ரல் 17ம் தேதி  மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாளை ஏப்ரல்18 ம்  தேதி மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு  மையத்திற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்.

தபால் ஓட்டு

மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4190க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி 92.80% நிறைவடைந்துள்ளது.  சென்னை உள்பட பல இடங்களில் பூத் சிலிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.

பூத் சிலிப் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைன் மூலம்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

முதியோர் தபால் வாக்கு வோட்டு தேர்தல்

தேர்தல் வாக்குப்பதிவு நாளில் 19ம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் நாளைக்குள் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணில்  ஊழியர்கள் புகார் அளிக்கலாம். 

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!