மொத்தமும் மாறுதே... நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. ஓங்கி ஒலிக்குது இந்தியா கூட்டணி!

 
பீகார் முதல்வர்  நிதிஷ் குமார்
இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி பாஜக கூட்டணி முன்னிலை வகித்தாலும் கடும் நெருக்கடி கொடுத்து காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டியது. 300 இடங்களில் வெற்றி... 400 இடங்களில் வெற்றி... என்று கெத்து காத்திய பாஜக கூட்டணி  மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்களில் தனித்து பெறாத நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கும், நிதிஷ்குமாருக்கும் மவுசு கூடியிருக்கிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். ஆனாலும் தனித்து எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 

மோடி - ராகுல்காந்தி

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் இந்தியா 240 இடங்களைத் தாண்டினால் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கும். எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ்குமார் (14) ஆகியோர் 30 இடங்களைப் பெற்றுள்ளனர். இந்த 30 இடங்களையும் பாஜகவிடம் இருந்து பறித்தால் அது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இந்தக் கணக்கை வைத்துக்கொண்டு இந்தியக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பகடைக்காயை நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் இந்திய கூட்டணி கட்சியை சேர்ந்த சரத் பவார், சந்திரபாபு நாயுடுவிடம் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதிஷ்குமார்

மேலும், அவர் நிதிஷ்குமாரிடமும் பேசியதாக கூறப்படுகிறது.  துணை பிரதமர் பதவியை வழங்க காங்கிரஸ் கூட்டணி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதீஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் இழுக்க இந்தியக் கூட்டணித் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web