102 தொகுதிகள், 1625 வேட்பாளர்கள்... இந்தியா முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது!

 
BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!
இன்று காலை 7  மணிக்கு இந்தியா முழுவதும்  18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு  துவங்கியது. இன்று இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

இதனையடுத்து  வடகிழக்கு மாநிலங்களான  அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவிலும், தலா ஒரு தொகுதியை உடைய மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.  

தேர்தல்

மேலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்காளம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சத்தீஸ்கர்   மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web