“மோடியின் கூட்டணி ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்” ப.சிதம்பரம் பேட்டி!

 
“மோடியின் கூட்டணி ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்” - ப.சிதம்பரம் கருத்து

“முதல்வராகவும், பிரதமராகவும் தனி நபராக ஆட்சி செய்தவர், கூட்டணி ஆட்சியில் முதல் முறையாக நுழைகிறார். இந்த ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "மக்களை முட்டாளாக்க மோடி முயற்சித்தார். அதையும் மீறி இந்த நாட்டு மக்கள் மோடிக்கு அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். மோடி நேருவுடன் தன்னை ஒப்பிடுகிறார். நேருவுடன் அவரை ஒப்பிடவே முடியாது. எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். 
இது நிலையான ஆட்சியாக இருக்குமா, இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும். கூட்டணி அரசு அமைப்பது சாதாரண விஷயம் இல்லை. மோடி எப்படி சமாளிகிறார் என்பதை பார்ப்போம். 

எல்லா மாநிலங்களுக்கும் பலமுறை சென்ற பிரதமர், மணிப்பூருக்கு ஒரு முறையும் செல்லவில்லை. அங்கு ஒருமோசமான அரசு நடைபெறுகிறது .

ஓய்ந்திருந்த, ஒதுங்கி இருந்த, வயது முதிர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் நடைபயணம் மூலம் களத்துக்கு கொண்டு வந்தார்” என்று அவர் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web