இன்று தேர்தல் விடுமுறை கிடையாது... டெலிவரி உண்டு... ப்ளிப்கார்ட், பிக் பாஸ்கெட் நிறுவனங்கள் அறிவிப்பு!

 
ஆன்லைன் ஆர்டர்
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஃபிளிப்கார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் இன்று தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதே சமயம், இன்று பெரும்பாலான நிறுவனங்கள், கடைகள் விடுமுறை அறிவித்துள்ளதால், எங்கள் சேவை இன்று இருக்கும் என்றும் அறிவித்துள்ளன.

ப்ளிப்கார்ட்
இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்  மற்றும் டாடா குழும நிறுவனமான பிக் பாஸ்கெட் இவைகளின் மீது  இன்று வாக்குப்பதிவு நாளில் டெலிவரி ஏஜெண்ட்களுக்கு விடுமுறை அளிக்க மறுப்பதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  இந்த மனுவை அளித்துள்ளார். தேர்தல் நாளான இன்று ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், பிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்கள் விடுமுறை கொடுக்க மறுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் செயல்முறையை எளிதாக்கும் வகையிலும் பொதுமக்கள் தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வசதியாகவும் ஏப்ரல் 19ம் தேதி அதிகாரப்பூர்வமான பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனநாயக செயல்பாட்டில்  அனைத்து மக்களும்  உறுதி செய்யும் வகையில், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.

ப்ளிப்கார்ட்

இந்நிலையில், "ஃபிளிப்கார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்கள் இன்று ஏப்ரல் 19ம் தேதி டெலிவரி ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பு எங்கள் கவனத்திற்கு வந்தது. இது டெலிவரி ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்த கவலைகளை எழுப்புகிறது"  .ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது, தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்."தகுதியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகிறோம். மேலும் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். ஊழியர்களை வாக்களிக்க ஊக்குவிக்கிறோம்" என பிளிப்கார்ட் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web