உதயநிதி ஸ்டாலின் மனைவியுடன் வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு!
இந்தியாவின் 18 வது மக்களவைப் பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினி , அஜீத், ராதிகா என திரையுலக பிரபலங்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தனது மனைவியுடன் வாக்களித்தார். நீண்ட வரிசை இருந்தும் அதில் காத்திருந்து மனைவியுடன் வாக்களித்து விட்டு திரும்பி சென்றார்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
