விக்ரவாண்டி இடைத் தேர்தல்... கெத்து காட்டும் நாம் தமிழர்...கதறும் பாமக... அலறும் திமுக!
மக்களவைத் தேர்தலை விட அதிக பரபரப்பைக் கிளப்பி வருகிறது விக்ரவாண்டி இடைத் தேர்தல். நாங்கள் இந்த ரேஸில் கலந்து கொள்ளவில்லை என்று கையைத் தூக்கி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கிறது அதிமுக. இந்நிலையில், அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாதது நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
களப்பணி செய்வதில் நாம் தமிழர் கட்சியினர் , பழைய கம்யூனிஸ்ட் தொண்டர்களை நினைவுபடுத்துகிறார்கள். அதிமுகவின் வாக்குகள் நிச்சயமாக திமுகவுக்கு செல்லப் போவதில்லை என்பதால் அவற்றை அறுவை செய்ய பாமக, நாம் தமிழர் கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.
விழுப்புரம் முழுக்கவே வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இம்முறை ஜெயிக்கலாம் எனும் நினைப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேசி பாமக களமிறங்குகிறது. ஆனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜாதி அரசியலை ரசிக்கவில்லை என்கிறார்கள் தொகுதிவாசிகள். இம்முறை நாம் தமிழர் கட்சியினருக்கு அதிக வாய்ப்புகள் இருக்கு என்பது தான் களநிலவரமாக இருக்கிறது.
திமுகவை எதிர்க்க பாமகவுக்கு அளிக்கிற வாக்குகள் வீணடிக்கப்படும் வாக்குகளாகவே மாறிவிடுகிற சூழல் நிலவி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதிமுக போட்டியிட்டு இருந்தாலும் வாக்குகள் சிதறுமே தவிர திமுகவின் வாக்கு வங்கி குறையாது. இப்போது திமுக எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் என்று அடித்து சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இன்னொரு தேர்தல் திருவிழா தான். ஆனால், இம்முறை தமிழக அரசியலில் மாற்றம் வரும். மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான தேர்தல் என்று மக்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். ஏனெனில் தமிழகத்தில் பாஜகவுக்கு என்றைக்குமே அதிகளவு ஆதரவு இருந்தது கிடையாது. திமுகவுக்கு சென்ற வாக்குகளில் பெரும்பாலானவை மோடி எதிர்ப்பு வாக்குகள் தான். ஆனால் விக்கிரவாண்டி தேர்தல் அப்படி கிடையாது. இவை திமுக அரசு மீது மக்கள் கொண்டிருக்கும் உண்மையான எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்தும் என்கிற நிஜம் திமுகவினரையே திணற வைத்திருக்கிறது.

இதில் பரிதாபமாக நிற்பது பாமக வேட்பாளர் அண்ணாமலை தான். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் நிலையில், இப்போதே தேர்தல் பணிகளைப் பார்க்க துவங்கி இருக்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். திமுகவில் சீட்டு கேட்டு கிடைக்காதவர்கள், செஞ்சி மஸ்தானின் பதவியைப் பறித்துக் கொண்டது, பொன்முடி மகனுக்கு புது பதவி என விழுப்புரம் தொகுதியிலும் வாரிசு அரசியலை கட்சி மேலிடம் துவங்கியிருப்பது தொகுதிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்காது எனும் வாக்கியம் இந்த தேர்தலில் மாற்றி எழுதப்படலாம் அல்லது 5,000லிருந்து 8,0000 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆளுங்கட்சி வேட்பாளர் திணறியபடியே தான் ஜெயிக்க முடியும் என்பது தான் இப்போதைய கள நிலவரமாக இருக்கிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
