21 மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீத பட்டியல்.. உங்க மாநிலத்தில் எத்தனை சதவீதம்? !

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
 

நேற்று ஏப்ரல் 19ம் தேதி இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள் 102 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு   21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது.  ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முதல் கட்ட வாக்குப்பதிவில் அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4 , சத்தீஸ்கர் 1, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1 இடம், நாகாலாந்து 1 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, தமிழ்நாடு 39, திரிபுரா 1, உத்தரப்பிரதேசம் 8, உத்தரகாண்ட் 5, மேற்குவங்கம் 3, அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 2 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  குறிப்பிட்ட சில பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான முறையில்  மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு சுமுகமாக  நிறைவு பெற்றது.  21 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நேற்று 7 மணி நிலவரப்படி சராசரியாக 60% வாக்குகள் பதிவாகியிருந்தன. இது குறித்த  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு  இன்னும் வெளியாகவில்லை  . இந்நிலையில் மாநிலங்கள் வாரியாக வாக்குசதவீத நிலவரம் வெளியாகியுள்ளது.

தேர்தல்

வாக்கு சதவீத நிலவரம்:

அந்தமான் & நிக்கோபார் – 56.87%
அருணாச்சல பிரதேசம் – 65.46%
அஸ்ஸாம் – 71.38%
பீகார் – 47.49%
சத்தீஸ்கர் – 63.41%
ஜம்மு & காஷ்மீர் – 65.08%
லட்சத்தீவு – 59.02%
மத்திய பிரதேசம் – 63.33%
மகாராஷ்டிரா – 55.29%
மணிப்பூர் – 68.62%
மேகாலயா – 70.26%
மிசோரம் – 54.18%
நாகாலாந்து – 56.76%
புதுச்சேரி – 73.25%

தேர்தல்
ராஜஸ்தான் – 50.95%
சிக்கிம் – 68.06%
தமிழ்நாடு –  69.46%
திரிபுரா – 79.90%
உத்தரப்பிரதேசம் – 57.61%
உத்தரகாண்ட் – 53.64%
மேற்கு வங்காளம் – 77.57%

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web